போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்டோவில் பயணம் செய்த மெர்சிடிஸ் இந்தியாவின் சிஇஓ- வைரல் பதிவு
போக்குவரத்து நெரிசலால் மார்ட்டின் தனது காரில் இருந்து இறங்கி, சில கிலோமீட்டர்கள் நடந்து சென்றுள்ளார்.;
புனே,
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் ஷ்வெங்க். இவர் ஒரு மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் காரை வைத்திருக்கிறார். இவர் புனேவில் தனது காரில் சென்று கொண்டு இருந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
இதனால் மார்ட்டின் ஷ்வெங்க் தனது காரில் இருந்து இறங்கி, சில கிலோமீட்டர்கள் நடந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி பயணம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "அற்புதமான புனே சாலைகளில் உங்கள் எஸ்-வகுப்பு மெர்சிடிஸ் கார் நெரிசலில் சிக்கிக்கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? காரில் இருந்து இறங்கி, சில கிமீ தூரம் நடந்து பின்னர் ஆட்டோ ரிக்ஷாவைப் பிடிக்கலாமா?" என பதிவிட்டுள்ளார்.
மெர்சிடிஸ் இந்தியா சிஇஓ-வின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.