திருமண விழாவில் அழையா விருந்தாளியாக சாப்பிட சென்ற எம்பிஏ மாணவருக்கு ஏற்பட்ட கதி...!

எம்.பி.ஏ. மாணவர் திருமண விழா ஒன்றில் அழைக்கபடா விருந்தாளியாக அங்கு இருந்த விலை உயர்ந்த உணவுகளை உண்டு உள்ளார்.

Update: 2022-12-02 06:48 GMT

போபால்

நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த '3 இடியட்ஸ்' படத்தில் உள்ளது போல் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சி திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை காட்சியாக வைக்கபடலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அழைக்கப்படாத விருந்தினர்கள் அரிதாகவே வரவேற்கப்படுகிறார்கள்.

எம்.பி.ஏ. மாணவர் திருமண விழா ஒன்றில் அழைக்கpபடா விருந்தாளியாக அங்கு இருந்த விலை உயர்ந்த உணவுகளை உண்டு உள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்து உள்ளனர்.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடந்ததாகவும், அவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இது போல் மற்றொரு சம்பவத்தில் பசியால் வாடிய ஒரு மாணவர் உணவுக்காக ஒரு திருமண விழா ஒன்றிற்குள் புகுந்து அங்கு மணமகனிடம் சென்று உங்கள் பெயர் தெரியாது இலவச உணவை சாப்பிடுவதற்காக அரங்கிற்குள் நுழைந்தேன். நான் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன், எனக்கு பசியாக இருந்தது. அதனால், நான் இங்கு சாப்பிட வந்தேன். உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?" என்று தைரியமாக கேட்டு உள்ளார். அவருடைய நேர்மையான வாக்குமூலத்தைக் கேட்ட மணமகன், "இல்லை. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை... உன் ஹாஸ்டலுக்கும் கொஞ்சம் சாப்பாடு பார்சலாகவும் எடுத்து செல்லலாம் என கூறி உள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்றை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் வெளியிட்டு உள்ளார். இது 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்