மணிஷ் சிசோடியா தப்ப முடியாது; ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது; பாஜக

டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதராம் உள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.

Update: 2022-08-24 08:25 GMT

புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன.இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மணிஷ் சிசோடியவின் கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதாக பாஜக பேரம் பேசுவதாகவும் ஆனால், உயிரே போனாலும் சதிகாரர்களுக்கு அடி பணிய மாட்டேன் என்று மணிஷ் சிசோடியா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது என்பதால் அவரால் தப்ப முடியது என்றார். மேலும் மதுபானக்கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பாஜக எழுப்பிய கேள்விகை திசை திருப்ப ஆம் ஆத்மி முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்