போலீசாரால் தேடப்பட்டு வந்த நபரை கொன்று உடலை வீசிச்சென்ற கும்பல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பல குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-24 15:32 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் பல குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள கர்தானி பகுதியில் அரை டஜன் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் சன்னி சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய எதிரிகளால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, "நேற்று இரவு முதல் சோனியை காணவில்லை. இந்நிலையில், இன்று காலை சோனியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

நேற்றிரவு அவரது எதிரிகள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.

போலீசில் சிக்காமல் தப்பி வந்த நபர், திடீரென மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்