மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூர் தொகுதியில் வெற்றி

சித்தாபூர் தொகுதியில் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.;

Update:2023-05-13 19:46 IST

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தாபூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே போட்டியிட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பிரியங்க் கார்கே 81,323 வாக்குகளும், அதே தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் 67,683 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் சித்தாபூர் தொகுதியில் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்