மராட்டியத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மராட்டியத்தில் பதிவாகியுள்ள அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும்.

Update: 2022-06-16 14:35 GMT

Image Courtesy : PTI 

மும்பை,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மராட்டியத்திலும் தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயரத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு 4,255 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதிக்கு பிறகு மராட்டியத்தில் பதிவாகியுள்ள அதிகப்பட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும்.

நேற்று 4 ஆயிரத்தை கடந்து 4,024 ஆக பதிவாகி இருந்த பாதிப்பு இன்று மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பி.ஏ.5 வகை கொரோனா பாதிப்பு 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 20,634 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் மும்பையில் மட்டும் 13,005 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,879- பேர் குணம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்