மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 946 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 2 ஆயிரத்து 946 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,432 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 10 ஆயிரத்து 889 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் மராட்டியத்தில் 3 ஆயிரத்து 81 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் நேற்று 2 ஆயிரத்து 922 பேருக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.