மின்வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 8 பேர் பலி
மராட்டியத்தில் மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தின் அசுட் பகுதியில் நேற்று மாலை 15க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அதேசாலையில் ஹர்னி பகுதியில் இருந்து டபொலி நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தது. லாரி திடீரென சாலையின் மறுபக்கம் தவறுதலாக வேகமாக வந்தது. அப்போது அவ்வழியாக வந்துகொண்டிருந்த மினி வேன் மீது லாரி அதி வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 8 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.