ஜி20 அடையாள சின்னத்தில் தாமரை உருவம் ராஜ்நாத்சிங்குக்கு காங்கிரஸ் பதில்

ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடக்க இருப்பதால், அதற்கான அடையாள சின்னத்தை பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி வெளியிட்டார்.

Update: 2022-11-14 20:45 GMT

புதுடெல்லி,

ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடக்க இருப்பதால், அதற்கான அடையாள சின்னத்தை பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி வெளியிட்டார். அதில், தாமரை உருவம் இடம்பெற்றுள்ளது. பா.ஜனதாவின் தேர்தல் சின்னம் தாமரை என்பதால், தாமரையை மத்திய அரசு முன்னிலைப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதற்கு பதில் அளித்த ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், ''தாமரை, ஒரு கட்சியின் சின்னம் மட்டுமல்ல. அது, நாட்டின் கலாசார அடையாளத்துடன் பின்னிப் பிணைந்தது'' என்று கூறினார். இந்தநிலையில், ராஜ்நாத்சிங்குக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

தாமரை உருவத்தை பயன்படுத்துவதை நியாயப்படுத்த ராஜ்நாத்சிங்கை களம் இறக்கி உள்ளனர். கை என்பது மிகவும் பழமையானது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. இன்னும் கிராமப்புறங்களில், ஆழ்ந்த கலாசார சின்னமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், அரசு நிகழ்ச்சிகளில் கை சின்னத்தை பயன்படுத்துவதை நிச்சயமாக நியாயப்படுத்த மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்