மக்களவை தேர்தல் 2024: ஒடிசாவில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என பா.ஜ.க. முடிவு

மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஒடிசா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

Update: 2023-12-30 16:18 GMT

புவனேஸ்வர்,

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில், மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இன்று மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், ஒடிசா மாநில பா.ஜ.க. பொறுப்பாளருமான சுனில் பன்சால், பா.ஜ.க. மாநில தலைவர் மன்மோகன் சமால், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் அபராஜித சாரங்கி மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபராஜித சாரங்கி, "ஒடிசாவில் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு பா.ஜ.க. வலுவாக உள்ளது. நாங்கள் மேலும் வலுவடைந்து, தேர்தலை தனியாகவே சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்