லோக் அயுக்தா துணை நீதிபதி பொதுமக்களிடம் நாளை குறைகேட்பு
சிக்பள்ளாப்பூரில் லோக் ஆயுக்தா துணை நீதிபதி பொதுமக்களிடம் நாளை குறைகேட்பு கூட்டம் நடத்து கிறார்.
கோலார் தங்கவயல்:
சிக்பள்ளாப்பூர் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 5-ந் தேதி(நாளை) கர்நாடக மாநில லோக்ஆயுக்தா துணை நீதிபதி பணீந்திரா சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு வர உள்ளார். சிக்பள்ளாப்பூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்பதுடன் புகார் மனுக்களை பெற்று கொள்கிறார். எனவே, பொதுமக்கள் வந்து தங்களின் குறைகளை மனுக்கள் மூலம் நீதிபதியிடம் அளிக்கலாம். அதேபோல் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வேலை செய்யும் விவகாரத்தில் லஞ்சம் கேட்பது தொடர்பாகவும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.