வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட கிருஷ்ணரை போல மோடியும் முயற்சிக்கிறார் முன்னாள் கவர்னர் வஜுபாய் வாலா கருத்து
கர்நாடக மாநில முன்னாள் கவர்னர் வஜுபாய் வாலா, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
ராஜ்கோட்,
கர்நாடக மாநில முன்னாள் கவர்னர் வஜுபாய் வாலா, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
பிறகு வஜுபாய் வாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி, இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பாடுபட்டு வருகிறார். கடந்த 15-ந்தேதி அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில், இந்தியாவை ஊழலில் இருந்தும், வாரிசு அரசியலில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்று பேசினார்.
கிருஷ்ணரை போலவே நாட்டில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட முயன்று வருகிறார். தவறான காரியங்கள் செய்து கொண்டிருந்த தனது உறவினர்களை கூட கிருஷ்ணர் விட்டுவைக்கவில்லை. கம்சனையும், சிசுபாலனையும் அவர் கொன்றார். மோடியும் அதே வேலையை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.