சரக்கு ரெயில் என்ஜின் மீது இறந்து கிடந்த சிறுத்தை - மின்சாரம் தாக்கி சாவு?

சரக்கு ரெயில் என்ஜின் மீது சிறுத்தை இறந்து கிடந்தது.

Update: 2023-03-07 23:42 GMT

சந்திராபூர்,

மராட்டிய மாநிலத்தின் சந்திராபூர் காட்டுப்பகுதியை ஒட்டிய சுகுஸ் நகர ரெயில் நிலையத்தில் நேற்று ஒரு சரக்கு ரெயில் வந்து நின்றது. அப்போது அதன் என்ஜின் மீது ஒரு சிறுத்தை இறந்து கிடப்பதை ரெயில்வே அதிகாரிகள் கண்டனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில் என்ஜின் மீது ஏறிய அந்த சிறுத்தை, உயரழுத்த மின்சார கம்பியால் மின்சாரம் தாக்கி இறந்திருக்கக்கூடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அந்த சிறுத்தையின் உடலை மீட்டு, வனத்துறை சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்