கர்நாடக எம்.எல்.ஏ. ரேவண்ணாவிற்கு ஜாமீன் கிடைக்குமா? கோர்ட்டு இன்று விசாரணை

மகனால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி சிறைவைத்ததாக ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்;

Update:2024-05-09 10:36 IST

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா. 33 வயதான அவர் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். மேலும் இவர் தற்போது பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே மகனால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி சிறைவைத்ததாக ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்