விமானத்தில் கடத்திய ரூ.22¼ லட்சம் தங்கம் பறிமுதல்
விமானத்தில் கடத்திய ரூ.22¼ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு: பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பயணி வைத்திருந்த பையில் இருந்த பொருட்களை எடுத்து பார்த்த போது தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தின் மீது பிளாஸ்டிக் ஒட்டப்பட்டு அந்த நபர் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.22¼ லட்சம் மதிப்பிலான 442 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.