பி.எப்.ஐ போராட்டத்தில் வன்முறை: ரூ.5.20 கோடி டெபாசிட் செய்ய கோர்ட் உத்தரவு

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கடந்த வாரம் நடத்திய போராட்டத்தில் 71 அரசு பேருந்துகள் சேதம் அடைந்தன.

Update: 2022-09-29 11:34 GMT

திருவனந்தபுரம்,

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயங்களுக்கு ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்பினர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த 350 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து, பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

பிஎப்ஐ அமைப்புக்கு எதிரான சோதனையை கண்டித்து கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் கேரளாவில் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது 71 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 11 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த கோர்ட் இரண்டு வாரத்திற்குள் தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பும், அதன் பொதுச் செயலாளர் அப்துல் சத்தாரும் மொத்தம் ரூ. 5.20 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்