பிபா உலக கோப்பை கால்பந்து வீரர்களை இலையில் வரைந்து அசத்தும் கேரள ஓவியர்

கேரள ஓவியர் ஒருவர் பிபா உலக கோப்பை கால்பந்து வீரர்களை இலையில் வரைந்து அசத்தி வருகிறார்.

Update: 2022-12-12 02:26 GMT



திருச்சூர்,


கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் சாருதத். ஓவிய கலையில் ஈடுபாடு கொண்டவர். விருப்பத்தின் பேரில் இவரே தனிப்பட்ட முறையில், ஆசிரியர் யாருமின்றி ஓவியம் வரைவது பற்றி கற்று கொண்டுள்ளார்.

இதில், இலையில் ஓவியம் வரைவதில் தேர்ந்தவராக உள்ளார். முதலில், பெரிய அளவுள்ள இலையில் ஓவியங்களை வரைந்து கொள்கிறார். உருவம் கிடைத்ததும், பின்னர் ஓவியம் கொண்ட இலையை தனியாக வெட்டி எடுக்கிறார்.

கத்தார் நாட்டில் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதனை முன்னிட்டு போட்டிகளில் பங்கேற்கும் பிரபல கால்பந்து வீரர்களை இலையில் வரைந்து அவர் அசத்தி வருகிறார்.

இதுபற்றி சாருதத் கூறும்போது, இலை ஓவியத்தில் எனக்கு முழு ஆர்வம் உள்ளது. பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வரும் சூழலில், கால்பந்து வீரர்களை இலையில் வரையலாம் என எண்ணினேன். அதன்படி, இலை ஓவியங்களை வரைகிறேன் என கூறுகிறார்.

கேரளாவில், இலை ஓவியம் வரைவதற்கு என்று தனியாக கூட்டமைப்பு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், ஊக்கமளிக்கும் நோக்கிலும் இந்த அமைப்பு உருவானது. இதன்படி, தென்னை ஓலை, பனை ஓலை மற்றும் பலா மர இலைகளில் கூட ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்