கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - 8 மாதங்களில் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விசாரணையை முடிக்க 8 மாதங்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-08-05 17:34 IST

புதுடெல்லி,

கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு கேரள நடிகை ஒருவர் காரில் சென்றபோது சில நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை ஜூலை 31-ந்தேதிக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைக்கு மேலும் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, 8 மாதங்களில் விசாரணையை முடிக்க அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்