மழையால் திடீர் நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
நிலச்சரிவு காரணமாக காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள்சிக்கித் தவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட ஏறக்குறைய 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையின் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றன.