கர்நாடகா: திடீர் மழையால் மூழ்கிய சுரங்கப்பாதை..காருடன் சிக்கிய 6 பேர்.. ஒருவர் பலி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்தது.;

Update:2023-05-21 18:55 IST

பெங்களூரு,

பெங்களூர் நகரில் திடீரென கொட்டி தீர்த்த மழையின் போது சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் கார் சிக்கிக்கொண்ட சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பெங்களூர் நகரின் கே ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் தேங்கிய வெள்ள நீரில் வழியாக சென்று எஸ் யூ வி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதில் மொத்தம் ஆறு பேர் பயணித்துள்ளனர். வெள்ள நீரில் சிக்கிய கார் எஞ்சின் அணைந்து போனதால் காரை அங்கே இருந்து எடுக்க முடியாமல் போனது. காரை அங்கு இருந்து வெளியே எடுக்க டிரைவர் முயற்சி செய்வதற்குள் மழை நீர் வெள்ளம் அதிகமாக சுரங்கப்பாதைக்குள் வந்ததால் கார் நீருக்குள் மூழ்கியது. அக்கம் பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசாரம் மீட்பு பணியில் ஈடுபடத் தொடங்கிய நிலையில் காரில் இருந்த ஆறு பேரை மீட்டபோது அதில் ஒரு பெண் மட்டும் நீரில் மூழ்கி முற்றிலும் மயக்க நிலைக்கு சென்றார். உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டு போகும் வழியிலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெப்பச்சலனம் காரணமாக பெங்களூருவில் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் ஆலங்கட்டி மழை உடன் கனமழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்