கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது

கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.

Update: 2022-09-16 21:52 GMT

பெங்களூரு:

சட்டசபை ேதர்தல்

கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2023) மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜனதா கட்சி ஆயத்தமாகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சி கூட்டங்களையும் பா.ஜனதா மேலிடம் நடத்தி வருகிறது.

ெசயற்குழு கூட்டம்

அதன்படி கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 11-ந் தேதி பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பா.ஜனதாவின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறர்கள்.

முக்கியத்துவம் வாய்ந்தது

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநில செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கு தயாராவது, கட்சியை பலப்படுத்துவது, பா.ஜனதா ஆட்சியின் சாதனை விளக்க மாநாடுகளை பிற மாவட்டங்களில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

சுற்றுப்பயணம்

வருகிற 23-ந் தேதி பா.ஜனதா ஆதிதிராவிடர் அணியின் மாநில மாநாடு பல்லாரியில் நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கூட்டி பலத்தை நிரூபிக்க அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாநிலம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்