நாட்டிலேயே புதுமைகளை புகுத்துவதில் கர்நாடகம் முதலிடம்: தமிழகத்துக்கு 5-வது இடம்

நாட்டிலேயே புதுமைகளை புகுத்துவதில் கர்நாடகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

Update: 2022-07-22 16:54 GMT

பெங்களூரு: நாட்டிலேயே புதுமைகளை புகுத்துவதில் கர்நாடகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

புதுமைகளை புகுத்துதல்

மத்திய அரசின் நிதி ஆயோக், ஆண்டுதோறும் புதுமைகளை புகுத்துவது, அறிமுகம் செய்யும் பணிகள் அடிப்படையில் மாநிலங்களை வரிசைப்படுத்துகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகம் அந்த வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் புதுமைகளை புகுத்துவதில் பெரிய மாநிலங்களில் நாட்டிலேயே கர்நாடகம் முதல் இடத்தில் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

கர்நாடகத்திற்கு அடுத்தப்படியாக தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்கள் முறையே 2-வது, 3-வது இடத்தை பிடித்துள்ளன. மராட்டியத்திற்கு 4-வது இடமும், தமிழ்நாட்டிற்கு 5-வது இடமும் கிடைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இடைவெளி குறைத்தல்

ஆராய்ச்சி, வளர்ச்சியில் மொத்த உள்நாட்டு செலவை அதிகரித்தல், ஆராய்ச்சி-வளர்ச்சி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கெடுப்பை ஊக்குவித்தல், தனியார் துறையின் தேவை மற்றும் கல்வி மூலம் நாடு உற்பத்தி செய்யும் திறன் இடையே இருக்கும் இடைவெளியை குறைத்தல் ஆகிய செயல்பாடுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்