கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மைசூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2024-10-02 22:49 GMT

கோப்புப்படம்

மைசூரு,

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான சினேகமயி கிருஷ்ணா, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி வழங்கினார். கோர்ட்டும் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கியது.

இதையடுத்து சித்தராமையா மீது லோக் அயுக்தா மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த மூடா வழக்கு வெளிவர முக்கிய காரணமாக இருந்தவர் சினேகமயி கிருஷ்ணா. இந்த நிலையில் அவருக்கு மைசூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக காசோலை மோசடி வழக்கு நேற்று மீண்டும் மைசூரு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகாத சினேகமயி கிருஷ்ணாவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். 

மூடா முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சினேகமயி கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பி உள்ளநிலையில் இன்று அவர் ஆஜராவார் என தெரிகிறது

Tags:    

மேலும் செய்திகள்