ஸ்கூட்டரில் சென்றபோது சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி

துப்பட்டா ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

Update: 2024-12-25 23:39 GMT

கோழிக்கோடு

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுப்பாடி பிராந்திய கமிட்டி உறுப்பினர் ஆவார். இவருடைய மனைவி சுதா(38). இவர்களுக்கு ஸ்டாலின் என்ற மகனும், மும்தாஸ் என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுதா நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வெளியே சென்று விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

புதுப்பாடி அருகே வந்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்