பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர் - அதிர்ச்சி சம்பவம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்தினரே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-10 10:39 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் பென்காபாத் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் கடந்த நேற்று முன் தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அதேகிராமத்தை சேர்ந்த நபர் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அப்போது, எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுவதற்கு பதில் அவர் மீது

மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதை பார்த்த கிராமத்தினர் சிலர் பெண்ணின் உடலில் பற்றிய தீயை அணைந்தனர். ஆனாலும், தீ வைத்ததில் அந்த பெண் படுகாயமடைந்தார். அதேவேளை, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீ வைத்த குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனை தொடர்ந்து தீக்காயத்தால் படுகாயமடைந்த பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்தனர். மேலும், பெண்ணை தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பியோடிய பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்