காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் மற்றும் கேஎன் திரிபாதி வேட்புமனு தாக்கல்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஜார்கண்ட் மாநில தலைவர் கேஎன் திரிபாதி மற்றும் சசி தரூர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2022-09-30 08:01 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதக முதன்முதலாக பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்ட சசி தரூர் இன்று வேட்புமனு தாக்கல் செய்து அதை உறுபடுத்திவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய்சிங் (75), தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில்,புதிய திருப்பமாக, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடப்போவதாக இன்று காலை தகவல் கசிந்தது.

எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக திக்விஜய சிங் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே போட்டி என்ற சூழல் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த நிலையில், புதிய திருப்பமாக, ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி,  ஜி23 குழுவை சேர்ந்த மணிஷ் திவாரியும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் போட்டியிடப் போவதில்லை என செய்தி வெளியானது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்