குற்றம் செய்தால் கைது செய்யுங்கள்; அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக மறுத்து ஹேமந்த் சோரன் சவால்
நான் குற்றம் செய்திருந்தால் என்னை கைது செய்யுங்கள் என அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த சோரன் சவால் விடுத்துள்ளார்.
ராஞ்சி,
நான் குற்றம் செய்திருந்தால் என்னை கைது செய்யுங்கள் என அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த சோரன் சவால் விடுத்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த சோரன் இன்று) நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை. மாறாக சத்தீஸ்கரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார்.
விழாவில் இதுகுறித்துப் பேசிய ஹேமந்த் சோரன், 'அமலாக்கத்துறை இன்று எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், ஏற்கெனவே இந்த விழாவுக்கு வர நான் திட்டமிட்டிருந்தேன். நான் உண்மையில் குற்றம் செய்திருந்தால் வந்து என்னைக் கைது செய்யுங்கள். ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? அமலாக்கத் துறை அலுவலகம் முன்பாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மக்களுக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.