சிறையில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினை சந்தித்த சிறை கண்காணிப்பாளர்....இருவரும் உரையாடும் சிசிடிவி காட்சிகள்..!

இன்று மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-11-26 15:32 GMT

புதுடெல்லி,

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த எப்ஐஆா் அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சில தினங்களுக்கு முன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் திகாா் சிறையில் மந்திரி சத்யேந்தா் ஜெயின் ஒட்டலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வெரைட்டி உணவுகளை சாப்பிட்டு மகிழும் புதிய சிசிடிவி விடியோ காட்சி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில் சத்யேந்தா் ஜெயினை சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சந்தித்து பேசுகிறார்.இருவரும் உரையாடும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்த மாதத்தில் சத்யேந்தர் ஜெயினுடன் தொடர்பில் இருந்ததாக சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்