மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 7-வது மாடியில் இருந்து குதித்து விஞ்ஞானி தற்கொலை...!

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அலுவலகத்தில் 7-வது மாடியில் இருந்து குதித்து விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-23 15:09 GMT

புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவன் கட்டிடத்தில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சரவை அலுவலகங்கள் உள்ளன. இங்கு தான் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சாஸ்திரி பவனில் செயல்பட்டு வரும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் 55 வயதான ராகேஷ் மாலிக் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், விஞ்ஞானி ராகேஷ் மாலிக் இன்று அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அலுவலகத்தின் 7-வது மாடியில் இருந்து குதித்து விஞ்ஞானி ராகேஷ் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விஞ்ஞானி ராகேஷ் அலுவலக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்