மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவது அரசின் நோக்கம்-மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவது அரசின் நோக்கம் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-13 16:34 GMT

பெங்களூரு: உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் மண்டியாவில் நடைபெற்ற பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:-கர்நாடகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மண்டியா பல்கலைக்கழகம் தரம் உயர்த்தப்படும். கிராமப்புற மாணவர்கள் நகரங்களுக்கு சென்று கல்வி கற்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். அவர்கள் இருக்கும் இடத்திலேயே கல்லூரிகள் இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து பட்ஜெட்டில் புதிதாக 7 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நவீன பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிலமோ அல்லது ஊழியர்களோ தேவை இல்லை. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த இடத்தில் பல்கலைக்கழகத்தை அமைக்க முடியும். மண்டியாவில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இங்கு விவசாயம் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்வது சரியாக இருக்கும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்