இஸ்ரோவால் 5 ஆண்டில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய மந்திரி தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

Update: 2022-12-17 01:50 GMT

புதுடெல்லி,

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை என 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்