புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறதா மழைக்கால கூட்டத்தொடர்?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், வருகிற ஜூலை மாதத்தின் 17 அல்லது 20-ம் தேதியில் தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஓரிரு நாட்களில் மழைக்கால கூட்டத்தொடருக்கான இறுதி தேதியை முடிவு செய்யவுள்ளது.
இந்த மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.