தொழில் அதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

Update: 2022-08-14 04:28 GMT

புதுடெல்லி,

தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை 6.45 மணிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. அண்மையில், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்க விழாவில் வீல்சேரில் வந்த ராகேஷ் ஜுன் ஜுன் வாலா வந்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்