ஆசியாவின் மிகப்பெரிய கல்வி கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடக்கம்- மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

ஆசியாவின் மிகப்பெரிய கல்வி கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடக்கம் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-20 18:45 GMT

பெங்களூரு:

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசின் கல்வித்துறை சார்பில் கல்வி கண்காட்சி பெங்களூருவில் நாளை (இன்று) தொடங்குகிறது. பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்த கண்காட்சி நடக்கிறது. கல்வி வளா்ச்சியில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியை கர்நாடகம் நடத்துவதில் பெருமை கொள்கிறது.

இந்த கண்காட்சியில் வெளிநாட்டு நிறுவனங்கள், தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் 15 நாடுகள் மற்றும் 10 மாநிலங்களின் கல்வி மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கண்காட்சியின்போது கல்வி குறித்த கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன. 4 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சி 23-ந் தேதி வரை நடக்கிறது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்