நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 15.18 சதவீதம் ஆக பதிவு! எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 15.18 சதவீதம் ஆக பதிவாகியுள்ளது.

Update: 2022-07-14 08:49 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதம் ஆக இருந்து, ஜூன் மாதத்தில் 15.18 சதவீதம் ஆக குறைந்துள்ளது. 

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 15.18 சதவீதம் ஆக பதிவாகியுள்ளது.

நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான அகில இந்திய ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் 15.18 சதவீதம் ஆக (தற்காலிகம்) பதிவாகியுள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தில் பதிவாகியிருந்த 15.88 சதவீத பணவீக்க விகிதத்தை விட சற்று குறைவு.

உணவுப் பொருட்கள், பெட்ரோலியம்,தாது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் கச்சாப் பொருட்கள், ஆதார உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், விலை உயர்ந்திருப்பதால், 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தில், வருடாந்திர நுகர்வோர் பணவீக்கம் 7 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக அரசாங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"எரிபொருள் மற்றும் எரிசக்தி" பிரிவில், ஜூன் மாதத்திற்கான குறியீட்டு எண் 0.65 சதவீதம் அதிகரித்து 155.4 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்திற்கான 154.4 சதவீதத்தை விட அதிகம். மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூன், 2022இல் கனிம எண்ணெய்களின் விலை 0.98 சதவீதம் அதிகரித்துள்ளன.

'உணவுப் பொருட்கள்' அடங்கிய உணவுக் குறியீடு ஜூன் மாதத்தில் 178.4 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்திற்கான 176.1 சதவீதத்தை விட அதிகம்.

ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம், உணவுக் குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்க விகிதம் மே மாதத்தில் 10.89 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 12.41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்