மக்களை மதத்தால் பிரிப்பது நாட்டை பலவீனப்படுத்தும்; உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

மக்களை ஜாதி மதத்தால் பிரிப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-09 09:44 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ககோரி மாவட்டத்தில் 1925 ஆகஸ்ட் 9-ம் தேதி ரெயில் ஒன்றை சுதத்திரபோராட்ட வீரர்கள் இடைமறித்து அதில் இருந்து பணத்தை எடுத்து சென்றனர். பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதங்களை வாங்க ரெயில் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் இருந்து பணத்தை சுதந்திர போராட்ட வீரர்கள் எடுத்து சென்றனர்.

இந்த நிகழ்வு நடைபெற்றதன் 97-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ககோரி நிகழ்வு தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவின் பலமே அதன் ஒற்றுமைதான். 135 கோடி மக்களும் ஒன்றாக பேசும்போது இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல் உலக ஜனநாயகத்தின் தாயாகவும் இந்தியா விளங்கும்.

ஜாதி, மதம், நம்பிக்கை, பகுதி, மொழி அடிப்படையில் நாம் பிரிந்தால் நமது பலம் பிளவடைந்து இந்தியா பலவீனப்படும்.

அது, வளர்ச்சிக்கு பாதிக்கப்பட்டு, சீர்குலைவு மற்றும் அராஜக நிலையை ஏற்படுத்தி நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்