லடாக்கில் நடைபெற இருக்கும் இந்தியாவின் முதல் உறைபனி ஏரி மாரத்தான் ஓட்டப்பந்தயம்
உறைபனி ஏரி மாரத்தான் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 75 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
லே,
இந்தியாவில் முதல் உறைபனி ஏரி மாரத்தான் போட்டி லடாக்கில் நடைபெற உள்ளது. லடாக்கில் உள்ள பாங்காங் சோ என்ற பகுதியில் வரும் 20-ந்தேதி இந்த மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாரத்தான் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 75 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம், அப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.