இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டபுள்-டெக்கர் பேருந்து மும்பையில் அறிமுகம்!

இந்தியாவின் முதல் மின்சார டபுள் டெக்கர் பேருந்து தெற்கு மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Update: 2022-08-18 14:53 GMT

மும்பை,

இந்தியாவின் முதல் மின்சார டபுள் டெக்கர் பேருந்து தெற்கு மும்பையில் உள்ள பி சென்டரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி இந்த பேருந்தை தெற்கு மும்பையில் உள்ள பி சென்டரில் அறிமுகப்படுத்தி வைத்தார். "மும்பையில் இன்று அசோக் லேலண்ட் நிறுவன எலக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:- "இது நிலையான போக்குவரத்து துறைக்கு மாறும் ஊக்கத்தை அளிக்கிறது. இத்தகைய முயற்சிகள் செலவு குறைந்த தீர்வுகள் ஆகும். இதன் மூலம், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு வளங்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பாரதம் என்ற இலக்கை அடையலாம்" என்று தெரிவித்தார்.

"ஸ்விட்ச் ஈஐவி 22" என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டை அடுக்கு பேருந்து, செப்டம்பர் முதல் மும்பை குடிமைப் போக்குவரத்து அமைப்பால் இயக்கப்படும். இந்த மின்சார பேருந்துகள் பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்யும்.

அதிநவீன தொழில்நுட்பம், அதி நவீன வடிவமைப்பு, மிக உயர்ந்த பாதுகாப்பு, சார்ஜிங் செய்ய வசதி, சத்தமில்லாத இயக்கம் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதி போன்ற பல அம்சங்கள், இந்த பேருந்தில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்