சற்று குறைந்த கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 636 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று முன்தினம் 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 636 ஆக குறைந்தது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 309-ல் இருந்து 4 ஆயிரத்து 394 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 3 பேர் பலியானார்கள். நேற்றும் உயிரிழப்பு 3 ஆக பதிவானது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 364 ஆக உயர்ந்தது.
இதுவரை நாடு முழுவதும் 220.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.