இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவின் கடற்சார் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் கடற்சார் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சி இன்று நிறைவு பெற்றது.

Update: 2024-05-17 16:09 GMT

திருவனந்தபுரம்,

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற கடற்சார் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சி கடந்த 15-ந்தேதி தொடங்கியது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த பயிற்சி இன்று(17-ந்தேதி) நிறைவு பெற்றுள்ளது.

'இந்திய பெருங்கடல் பகுதி: பிராந்திய கடற்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சி' என்ற கருப்பொருளுடன் இந்த கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்சார் பாதுகாப்பில் நிலவும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து பிராந்திய கடற்படைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்