உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி - மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தகவல்

உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-13 18:29 GMT

பதோகி,

பா.ஜனதாவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியின் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாராகி வருகிறது. எங்களின் ஆற்றல் மிக்க தொண்டர்களின் பலத்தால், மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நல்ல பலன்களைப் பெறுவோம். பொறுப்பு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அதை நிறைவேற்றி விட்டோம். எல்லா சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவரின் இந்த அறிவிப்பு உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்