உப்பள்ளியில் சொத்து தகராறில் அண்ணன், அண்ணியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி

உப்பள்ளியில் சொத்து தகராறில் அண்ணன் மற்றும் அவரது மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-10-14 18:45 GMT

உப்பள்ளி;

சொத்து தகராறு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி காமனகட்டி கிராமத்தை சேர்ந்தவர் கள்ளனகவுடா (வயது 35). இவரது சகோதரர் பசவன கவுடா (28). இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தம்பி பசவனகவுடா தனது அண்ணனிடம் சொத்துகளை எழுதி வைக்கும்படி கூறினார். இதனால் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு கத்தியுடன் சென்ற பசவனகவுடா, அண்ணன் கள்ளனகவுடாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அண்ணன் முகத்தின் மீது வீசினார். மிளகாய் பொடி கண்ணில் பட்டதும் கள்ளனகவுடா நிலை குலைந்துபோனார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணன் கள்ளனகவுடாவை, பசவனகவுடா சரமாரியாக குத்தினார்.

கொலை செய்ய முயற்சி

இதை பார்த்து கள்ளனகவுடாவின் மனைவி ஓடி வந்து பசவனகவுடாவை தடுத்து நிறுத்தினார். ஆனால் பசவனகவுடா, அதே கத்தியால், அண்ணன் மனைவியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உப்பள்ளி நவநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் உப்பள்ளி நவநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பசவனகவுடாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்