மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
ரூ.4,000 கோடி மதிப்பிலான ரெயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
போபால்,
பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, இன்று மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . அதன்படி ரூ.4,000 கோடி மதிப்பிலான ரெயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் .
சுமார் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பிலான கோட்டா - பினா ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் மோரி-கோரி-விதிஷா-ஹினாட்டியா 4 வழிச்சாலை, ஹினாட்டியா-மெலுவா இருவழிச்சாலை என ரூ.1,580 கோடி ரூபாய் மதிப்பிலான 2 சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.