புத்தாண்டு கொண்டாட்டம்: துணை போலீஸ் கமிஷனர்களுடன், பெங்களூரு கமிஷனர் ஆலோசனை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை போலீஸ் கமிஷனர்களுடன், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-12-27 18:45 GMT

பெங்களூரு:

ஆலோசனை

புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே உள்ளன. பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடந்து வருகிறது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துணை போலீஸ் கமிஷனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த வழிகாட்டுதல்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் 8 மண்டலங்களில் துணை போலீஸ் கமிஷனர்கள், போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, துணை போலீஸ் கமிஷனர்களுக்கு, பிரதாப் ரெட்டி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

ஓட்டல்கள் கண்காணிப்பு

மேலும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு ஆகிய இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுபோல இந்திராநகர், கோரமங்களா, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதிகள் உள்ள ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளை கண்காணிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விரும்பத்தகாத செயல்கள் நடக்காமல் தடுப்பது, சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்