பெங்களூருவில் செல்போன் திருட்டை தடுக்க செயலி அறிமுகம்

பெங்களூருவில் செல்போன் திருட்டை தடுக்க போலீசார் ஒரு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Update: 2022-09-18 18:45 GMT

பெங்களூரு: பெங்களூருவில் செல்போன் திருட்டை தடுக்க போலீசார் ஒரு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

செல்போன் திருட்டு

பெங்களூருவில் செல்போன்கள் திருட்டை தடுக்க பெங்களூரு போலீசாரால் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

செல்போன் திருட்டை தடுக்க சி.இ.ஐ.ஆர். என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. செல்போன்கள் திருடப்பட்ட பின்னர் இந்த சி.இ.ஐ.ஆர். செயலிக்குள் சென்று செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கொடுத்தால் சிறிது நேரத்தில் திருடப்பட்ட செல்போனின் செயல்பாடு முடங்கி விடும். அதன்பின்னர் அந்த செல்போனை விற்க முடியாது.

மத்திய அரசிடம் அனுமதி

அந்த செல்போனை திருடி செல்லும் நபர்கள் செல்போனை ஆன் செய்ய முயன்றால் அந்த செல்போன் இருக்கும் இடம் உடனடியாக தெரிந்து விடும். இதன்மூலம் செல்போனை திருடி சென்றவர்களை போலீசார் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. செல்போன் திருட்டை தடுக்க இந்த சி.இ.ஐ.ஆர். செயலியை பயன்படுத்த பெங்களூரு போலீசார், மத்திய அரசின் அனுமதியை பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சி.இ.ஐ.ஆர். செயலியின் பயன்பாடு நேற்று முதல் தொடங்கி உள்ளது. 1½ மாதம் சோதனை அடிப்படையில் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்றும், அதன்பின்னர் நிரந்தரமாக இந்த செயலி பயன்பாட்டில் இருக்கும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்