கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி பணிகள் முடங்கி போகும் - ஜே.பி.நட்டா

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி பணிகள் முடங்கி போகும் என்று ஜே.பி.நட்டா கூறினார்.

Update: 2023-04-30 04:22 GMT

சிக்கமகளூரு,

கர்நாடகாவில் சட்டசபை தேர்லுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் கர்நாடகவே நாளுக்கு நாள் பரபரப்பாக காண்கிறது.

இந்த நிலையில் சிக்கமகளுரில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தல் கர்நாடகத்தில் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் தேர்தல் ஆகும். மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும் காலம் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் நிஜலிங்கப்பா வீரேந்திர பட்டீல் மற்றும் லிங்காயத்தை சேர்ந்தவர்களுக்கு என்ன செய்தது. சித்தராமையா ஆட்சியின் போது மாநிலத்தில் கலவரங்கள் நடந்தது.

இட ஒதுக்கீட்டை டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் நடக்கும் அனைத்து வளர்ச்சி பணிகள் முடங்கி போகும். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்