தார்வார் புறநகர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்

சட்டசபை தேர்தலில் தார்வார் புறநகர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்று முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-07 16:58 GMT

உப்பள்ளி:-

காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி. இவர், தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்தார். மேலும் அவர், தார்வார் டவுனுக்குள் நுழைய கோர்ட்டு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி தனது பிறந்தநாளை, தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா கவளக்கேரி கிராமத்தில் வைத்து தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி என்னை வீழ்த்துவதில் குறிக்கோளாக உள்ளது. 25 ஆண்டுகாலமாக அரசியல் வாழ்க்கையில் நான் எந்தவொரு அரசியல் விரோதத்திலும் ஈடுபடவில்லை. வரும் சட்டசபை தேர்தலுக்குள் தார்வாருக்குள் நுழைய கோர்ட்டு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சட்டசபை தேர்தலில் சிக்காம்வி, கித்தூர் தொகுதிகளில் போட்டியிட எனது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் தார்வார் புறநகர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனது தொகுதியில் மக்கள் சேவையே தொடர்ந்து செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனாலும் யார் போட்டியிட வேண்டும் என்று கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். முஸ்லிம் இடஒதுக்கீட்டை எடுத்துவிட்டு பஞ்சமசாலி சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்று யத்னால், அரவிந்த் பெல்லத் ஆகியோர் கூறியிருப்பது தவறான கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்