காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2023-04-29 22:03 GMT

பெங்களூரு:-

கூச்சல் போடுகிறார்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெகலாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புராவில் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றனது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் கணக்கு ஊழல் காலத்தை கொண்டது. காங்கிரஸ் என்றாலே ஊழல் தான். காங்கிரக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன். பா.ஜனதா கணக்கில் அம்ரித் காலம் இடம் பெற்றுள்ளது. ஊழல் கதவுகள் மூடப்பட்டதால் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது. அதனால் அவர்கள் மோடிக்கு கல்லறை கட்டுவதாக கூச்சல் போடுகிறார்கள்.

தாமரை மலர வைக்கிறார்கள்

காங்கிரசார் எனக்கு கல்லறை கட்டுவதில் பரபரப்பாக இருக்கும் நிலையில் மக்கள் தாமரையை மலர வைக்கிறார்கள். கர்நாடகத்தில் நிலையான, பெரும்பான்மை பலத்துடன் கூடிய பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்த அமைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். கர்நாடக வளர்ச்சியின் அறிகுறி தாமரை. வளர்ச்சிக்கு பா, .ஜனதாவிடம் மட்டுமே திட்டங்கள் உள்ளன.

கா்நாடகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம், அனுபவம் வாய்ந்த புதிய குழுவை பா.ஜனதா அமைத்துள்ளது. இந்த குழு கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றும். இந்த குழுவுக்கு உங்கின் ஆசிர்வாதம் தேவை. என்னை பொறுத்தவரையில் கர்நாடகம் முக்கியமான மாநிலம். அதனால் எனக்கு உங்களின் ஆசிர்வாதம் தேவை. கர்நாடகத்திற்கு நிலையான அரசியல் பலம் கொண்ட கட்சி தேவை. தனி மெஜாரிட்டியுடன் கூடிய வலுவான அரசு தேவை.

பசவண்ணரின் கொள்கைகள்

கர்நாடகத்தை வளர்ச்சியில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல பா.ஜனதாவால் மட்டுமே வலுவான நிலையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க முடியும். இதுவே தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்றுனும், அதனால் தன்னை வெற்றி பெற வைக்குமாறும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் (சித்தராமையா) கேட்கிறார். காங்கிரஸ் என்ன ஒரு மோசமான நிலைக்கு சென்றுள்ளது பாருங்கள்.

கர்நாடக காங்ககள் சேர்ந்துபோன, தோல்வி அடைந்த காங்கிரசை ஆதரிக்க மாட்டாா்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் பா.ஜனதா குமிழ்களுடன் பா.ஜனதா ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. பா.ஜனதா பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு கர்நாடகத்தை கட்டமைப்பதற்கான தேர்தல் ஆகும். இதற்கான திட்டங்கள் பா.ஜனதாவிடம் உள்ளன. அத்தகைய திட்டங்கள் காங்கிரசிடம் இல்லை. அதற்கான ஆர்வமும் இல்லை.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்