ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்தல் - கணவன் மீது மனைவி புகார்..!
ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்துவதாக கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்
டெல்லி,
டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவரது கணவர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணை தொடர்ந்து ஆபாச படம் பார்க்கும்படியும் அதில் நடிக்கும் நடிகைகள் போன்று உடை அணிந்து தன் முன் வந்து நிற்க்கும் படியும் வற்புறுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக அவர் இவ்வாறு வலியுறுத்திய நிலையில், ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனைவி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவன் மீது போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக துணை கமிஷனர் ரோகித் மீனா கூறினார். மேலும் வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு ஆதாரங்கள் பாதுகாக்கபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.