அதானியின் சொத்துகள் இரண்டரை ஆண்டுகளில் உயர்ந்தது எப்படி? மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

தொழிலதிபர் அதானியின் சொத்துகள் இரண்டரை ஆண்டுகளில் உயர்ந்தது எப்படி? என எங்களுக்கு தெரிய வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

Update: 2023-03-15 14:03 GMT



புதுடெல்லி,


தொழிலதிபர் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், இரண்டரை ஆண்டுகளில் அவரது சொத்துகள் உயர்ந்தது எப்படி? என எங்களுக்கு தெரிய வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறும்போது, அதானி விவகாரத்தில் 17 முதல் 18 அரசியல் கட்சிகளை சேர்ந்த நாங்கள் அனைவரும் அமலாக்க துறை இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க இருந்தோம்.

ஆனால், விஜய் சவுக் பகுதியில் எந்த பகுதிக்கும் எங்களை போக அரசு விடவில்லை. எங்களை தடுத்து நிறுத்தி விட்டனர். லட்சக்கணக்கான பணமோசடி நடந்து உள்ளது.

எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பிற வங்கிகள் அழிக்கப்பட்டு உள்ளன. அரசு சொத்துகளை வாங்க ஒருவருக்கு அரசு நிதி அளித்து வருகிறது. முன்பு குறைவான சொத்துகளை வைத்திருந்த ஒருவரை பிரதமர் ஊக்குவிக்கிறார்.

ஆனால், தற்போது ரூ.13 லட்சம் கோடிகளுக்கு சொத்துகள் விரிவடைந்து உள்ளன. எப்படி இது நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? யார் பணம் தருகின்றனர்? அதுபற்றி ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு இடையே என்ன உறவு உள்ளது? என்று கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்